ஈரான் நாட்டில் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை: உச்சக்கட்டத்தை எட்டும் விவகாரம்

Report Print Peterson Peterson in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்க குடிமக்களுக்கு தடை விதித்துள்ளதன் மூலம் அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்கியுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அந்நாட்டிற்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 7 நாடுகளுக்கு அதிரடியாக தடை விதித்தார்.

சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டிரம்பின் உத்தரவை ஐ.நா சபையும் கண்டித்துள்ளது.

இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் உத்தரவால் கடும் கோபம் கொண்ட ஈரான் நாடு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்கா விதித்துள்ள தடை நீங்கும் வரை அந்நாட்டை சேர்ந்தவர்கள் ஈரான் நாட்டிற்குள் நுழையக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்த இந்த தகவலை அந்நாட்டு அரசு ஊடகமும் உறுதி செய்துள்ளது.

7 இஸ்லாமிய நாடுகள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கும் டிரம்பின் உத்தரவு தீவிரவாதிகளுக்கு ஒரு மிகச்சிறந்த பரிசாக அமைந்துள்ளது என ஈரான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், அமெரிக்காவில் நுழைய 7 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு தடை விதித்திருப்பதன் மூலம் இந்நாடுகள் ஆபத்தான நாடுகள் என்பதை உலகிற்கு டிரம்ப் உணர்த்த முயற்சிக்கிறாரா? என்ற அச்சமும் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் உத்தரவை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments