பாகிஸ்தானிற்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி..!

Report Print Thayalan Thayalan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏயின், முன்னாள் உயரதிகாரி ஒருவர் உலகின் மிக அச்சுறுத்தலான நாடு பாகிஸ்தான். என அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலக நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலான நாடு பாகிஸ்தான். அந்நாட்டில் பொருளாதாரம் சீர்குலைந்து, தீவிரவாதம் பெருகியுள்ளதுடன், அணுஆயுத போட்டியில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான், உலக நாடுகளை அச்சுறுத்துவதாக முன்னாள் அமெரிக்க சிஐஏ அதிகாரி கெவின் ஹல்பர்ட் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பணிபுரிந்துள்ள கெவின் ஹல்பர்ட், அமெரிக்க புலனாய்வுத் துறையினரின் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் ‘சிப்பர் பிரீப்’ என்ற வலைத்தளத்தின் மூலமே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் என்பது உலக நாடுகளின் ஒரு மத்திய மையமாகும் எனவும், அந்நாட்டின் பின்னடைவு உலக நாடுகளை அச்சுறுத்தும் வல்லமையுடையது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையால்தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும், சர்வதேச நாணய நிதியமும் கோடிக்கணக்கான டொலர்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு அண்மைய நாடான ஆப்கானிஸ்தானின் இராணுவ செயற்பாடுகளை மேம்படுத்த, அமெரிக்காவிற்கு துணையாக இருக்கும் நாடாக பாகிஸ்தான் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக மோசமான நிலையை அடைந்தால், அல்லது பாரிய தாக்கத்தை எதிர்கொண்டால் அது உலகநாடுகளிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அதனை தடுப்பதற்காகவே தொடர்ந்து அமெரிக்க பொருளாதார பலத்தை ஏற்படுத்ததை கொடுப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments