பொய் பேசி நிருபரிடம் அசிங்கப்பட்ட டொனால்டு டிரம்ப்! வைரல் வீடியோ

Report Print Basu in அமெரிக்கா
0Shares
0Shares
Cineulagam.com

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பொது வெளியில் பொய் பேசி நிருபரிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய டொனால்டு டிரம்ப், தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த உறுமொழியை தற்போது நான் நிறைவேற்றி வருகிறேன்.

நான் அளித்த வாக்குறுதிக்காகவே அமெரிக்கர்கள் அதிகளவில் வாக்களித்தனர். தேர்தல் முடிவில் 306 இடத்தில் வெற்றிப்பெற்றேன்.முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரேகனை அடுத்து அதிக இடத்தில் வெற்றிப்பெற்றது நான் தான் என குறிப்பிட்டார்.

இதையடுத்து கேள்வி எழுப்பிய என்பிசி நிருபர், ரொனால்ட் ரேகனை அடுத்து அதிக இடத்தில் வெற்றிப்பெற்றதாக குறிப்பிட்டீர்கள்.

ஆனால், ஓபாமா 365 இடத்தில் வெற்றிப்பெற்றார் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டிரம்ப் நான் குடியரசு கட்சி வேட்பாளர்களை குறிப்பிட்டே கூறினேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நிருபர், குடியரசு கட்சி வேட்பாளர் புஷ் 426 இடத்தில் வெற்றிப்பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார். எனவே, அமெரிக்கர்கள் ஏன் உங்களை மட்டுமே நம்ப வேண்டும். . நீங்கள் அளிக்கும் தகவல் தவறானது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், அது எனக்கு தெரியாது. எனக்கு கொடுக்கப்பட்ட தகவலில் அவ்வாறே உள்ளது என தெரிவித்து அசிங்கப்பட்டார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments