பெற்ற தாயை கொலை செய்து நாடகமாடிய இந்தியச் சிறுவன்: மடக்கிப் பிடித்த பொலிஸ்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

அமெரிக்காவில் பெற்ற தாயாரை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய இந்தியச் சிறுவனை ஓராண்டுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் கரோலினா பகுதியில் குடியிருந்து வந்தவர் 57 வயதான நளினி தெல்லப்ரோலு. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார். அவரது முகத்தில் பிளாஸ்டிக் பையை மூடி கொலை செய்துள்ளதும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

advertisement

கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்த மாகாண பொலிஸ் படை, நளினியின் குடியிருப்பில் யாரோ பலவந்தமாக புகுந்து கொலையை நடத்தியதற்கான அடையாளம் இல்லை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பெற்ற தாயையே கொன்றதாக 17 வயதான மகன் உப்பலாபதி கைது செய்யப்பட்டுள்ளது குடும்பத்தினரையும் நட்பு வட்டாரத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த பொது தாயாரின் உடல் கேரேஜில் கிடந்ததாக மகன் உப்பலாபதி விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

“பெற்ற தாயை மகனே கொல்லக்கூடிய சாத்தியம் மனதை பிசைகிறது, மிகவும் மோசமானது, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவது” என்று சதீஷ் காரிமெல்லா என்ற டவுன் கவுன்சில்மேன் தெரிவித்துள்ளார்.

கொலையுண்ட நளினியின் நீண்ட நாளைய நண்பர் பத்மா தமலா கூறும்போது, “நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம், இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, அவர் குழந்தைகள் நலனுக்காகவே வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்” என்றார். இன்னொரு குடும்ப நண்பர் விஜய் ஜவாதி கூறும்போது, “என்னால் இன்னும் நம்ப முடியவில்லை” என்றார்.

ஆனால் விசாரணை அதிகாரிகள் மகன் தான் தாயைக் கொன்றார் என்ற முடிவுக்கு எப்படி வந்தனர் என்ற விவரம் வெளியிடவில்லை.

மகன் உப்பலாபதி கிளாஸ் பி1 பிரிவில் கொடும்பாதகச் செயல் குற்றம்சாட்டப்பட்டுள்ளார், பரோலில் கூட வெளிவர முடியாத சிறையில் பல ஆண்டுகள் கழிக்க வேண்டிய தண்டனைக்குரிய குற்றமாகும் இது.

பிரேதப் பரிசோதனையில் கொலை ஊர்ஜிதமாகியுள்ளது. தாயார் நளினியின் கழுத்து, முகம், தலை, கைகளில் காயங்கள், கழுத்தெலும்பு முறிவு ஆகியவை தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட நளினி தெல்லப்ரோலு டியூக் மெடிக்கல் செண்டரில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments