அமெரிக்காவில் பூமிக்கு கீழே 45 அடி ஆழத்தில் பல்வேறு வசதிகளுடன், அணுகுண்டு போட்டால் கூட தாக்காத வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Georgia மாகாணத்தில் உள்ள Savannah நகரில் 17.5 மில்லியன் டொலர் செலவில் பூமியின் 45 அடிக்கு கீழே வீடு உருவாக்கப்பட்டுள்ளது.
அருமையான கட்டிடகலையுடனும், பல்வேறு வசதிகளுடனும் 32 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், 20 கிலோ அளவு கூடிய அணுகுண்டு தாக்குதலை கூட இந்த வீடு தாங்கும்.
இந்த பங்களாவில், 3 அடி தடித்த சுவர்கள், ஒரு செவிலியர் அறை, தூய்மையாக்கல் மழை, மற்றும் $100,000 மதிப்புள்ள ஒரு சி.சி.டிவி ககெமரா அமைப்பும் உள்ளது.
மேலும், நான்கு அடுக்குமாடி குடியிருப்புடன் ஒரு சமையலறை, சாப்பிடும் அறை, இரண்டு படுக்கையறைகள், ஒரு குளியலறைகள் உள்ளன
இந்த பதுங்குகுழி வீட்டில் வடிவம் கடந்த 1969ல் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 2012ல் தான் முழுவதும் புதுப்பிக்கப்பட்டது.