உலகிலேயே அதி பயங்கரமான நீச்சல் குளம் இதுதான்: திகில் வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 40வது மாடியில் அமைந்திருக்கும் நீச்சல் குளம் சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹெளஸ்டன் நகரில் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.

இந்த கட்டிடத்தின் 40-ஆவது மாடியின் முனையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான இந்த நீச்சல் குளம், கட்டிடத்திலிருந்து 10 அடி ஆழத்துக்கு விரிவாக உள்ளது.

இதில் நீந்துவதன் மூலம் நகரின் மீதே நீச்சல் அடிக்கும் உணர்வும், வானத்தில் பறப்பது போன்ற உணர்வும் ஏற்படும்.

அதே வேளையில் பறவைகள் கண் பார்வைக்குள் நகரம் எப்படி தெரியுமோ அது போல் இந்த நீச்சல் குளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

8 அடி தடிமன் கொண்ட கண்ணாடியால் உருவாகியுள்ள இந்த படுபயங்கரமான நீச்சல் குளத்தில் மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே நீச்சல் அடிக்க முடியும் என கூறினால் அது மிகையாகாது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments