மணமகனாக கண்டவனை கணவனாக ஏற்றுக்கொண்ட 95 வயது பாட்டி

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் மணமகனாக சந்தித்தவரை 66 வருடங்களுக்கு பிறகு பெண்மணி ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

காதலுக்கு வயது வரம்பு கிடையாது என்பதை இந்த வயதான காதல் ஜோடிகள் நிரூபித்துள்ளனர்.

66 வருடங்களுக்கு முன்னர் மார்க்ரேட் என்பவர் பெர்னாட்டின் திருமணத்தில் கலந்துகொண்டார். அதன் மூலம் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெர்னாட்டின் மனைவி உடல் நிலை சரியில்லாமல் இறந்துபோன பின்னர், அவரது இறுதி சடங்கில் மார்க்ரேட் கலந்துகொண்டார். இதன் மூலம் இவர்கள் நட்பு தொடர ஆரம்பித்தது. மார்க்ரேட்டின் கணவரும் 30 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் இறந்துபோனார்.

தனிமையில் இருந்த இரண்டு பேரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பெர்னாட்டின் வயது (93), மார்க்ரேட்டின் வயது (95) ஆகும். ஒருவரையாருவர் புரிந்துகொள்ள ஆரம்பித்தவுடன் இவர்களுக்கு காதல் வந்துள்ளது, தனிமையில் ஒரு துணை வேண்டும் என்பதை புரிந்துகொண்ட இவர்கள், உறவினர்கள் உதவியுடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இதுகுறித்து பெர்னாட் கூறியதாவது, இந்த வயதில் திருமணம் செய்துகொள்வேன் என கனவில் கூட நான் நினைக்கவில்லை, எனக்கு பதட்டமாகவும் அதே சமயத்தில் உற்சாகமாகவும் இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments