அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: தீவிர சிகிச்சையில் நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Thayalan Thayalan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுக் கட்சியை சேர்ந்த லூசியானா பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ஸ்கேலிஸ், விர்ஜினியா மாகாணத்தில் பேஸ்பால் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

அவருடன் அவரது உதவியாளர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர், திடீரென அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். அதில் ஸ்கேலிஸ் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு குண்டடிப்பட்டது.

தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர் மீது திருப்பித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனிடையே காயமடைந்த ஸ்கேலிஸ் மற்றும் அவரது உதவியாளர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஸ்கேலிஸ்க்கு இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது.

இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தனது டுவிட்டரில் பதிவிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'என்னுடைய நண்பர் மற்றும் தேசப்பற்றுமிக்கவர் குண்டடிக் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலமடைவார். என்னுடைய பிரார்த்தனை எப்போதும் அவருடன் இருக்கும்' என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments