மகனை காப்பாற்றும் முயற்சியில் உயிரை விட்ட தந்தை: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் ஏரியில் விழுந்த மகனை காப்பாற்றும் நோக்கில் உள்ளே குதித்த தந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Moline நகரை சேர்ந்தவர் Malik Williams (25), இவர் மனைவி Heather Holmes (22) இவர்களுக்கு Jaden (6) மற்றும் Joziah என இரு பிள்ளைகளை உள்ளனர்.

சம்பவத்துன்று Malik தனது குடும்பத்தாரை அழைத்து கொண்டு அருகிலிருக்கும் ஏரிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.

Malik மற்றும் Jaden அருகருகே உட்கார்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்

அப்போது அங்கு இருந்த Riley Gomez (16) என்ற சிறுவன் தான் வைத்திருந்த கமெராவில் அழகாக உட்கார்ந்திருந்த Malik மற்றும் Jadenஐ புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது தான் அந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து Riley கூறுகையில், புகைப்படம் எடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் ஏரியின் கரையில் உட்கார்ந்திருந்த Jadenஐ காணவில்லை.

இதையடுத்து Malik ஏரிக்குள் குதித்தார். அப்போது தான் Jaden தண்ணீருக்குள் விழுந்ததை நான் உணர்ந்தேன் என கூறியுள்ளார்.

இதனிடையில், நீச்சல் தெரியாத Malik மகனை காப்பாற்றும் நோக்கில் நீரில் திணறியுள்ளார்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் ஏரியில் குதித்து Jadenஐ காப்பாற்றியுள்ளார். ஆனால் அதற்குள் Malik நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட Malikன் சடலம் இன்னும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் வேளையில், Riley கடைசியாக எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments