நயாகராவில் சாதிக்க விரும்பிய நபருக்கு நேர்ந்த கதி

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

நயாகரா அருவியில் எந்தவித பாதுகாப்புமின்றி குதித்து உயிர்பிழைத்த நபர், மற்றுமொரு சாதனை முயற்சியின் போது உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2003 அம் ஆண்டு நயாகரா அருவியில் முதல் முறையாக உரிய பாதுகாப்பு உபகரணமின்றி குதித்து, காயங்களோடு உயிர்பிழைத்தவர் அமெரிக்காவை சேர்ந்த கிர்க் ஜோன்ஸ்.

advertisement

53வயது நிரம்பிய இவர், மற்றுமொரு சாதனை படைக்க விரும்பி, எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி, ஏப்ரல் 19ஆம் திகதி நயாகரா அருவியின் மேற்பகுதியிலிருந்து, inflatable பந்திலிருந்து குதித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 ஆம் திகதி அருவிலியிருந்து சுமார் 19 கிலோமீற்றர் தூரத்தில் ஜோன்ஸின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜோன்ஸ் பயன்படுத்திய காலியான பந்து மட்டுமே கிடைத்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிர்க் ஜோன்ஸ் கடந்த 2003 ஆம் ஆண்டு நயாகராவில் 180 அடி ஆழத்தில் குதித்து உயிர்பிழைத்துள்ளார்.

இந்த நிகழ்வு கனடாவில் அவருக்கு புகழை ஈட்டித் தந்ததுடன் அரசு தரப்பில் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் அவர் மீது பாய்ந்தது. இதனையடுத்து கனடா அரசு அவருக்கு வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments