ஜப்பான் கடலில் மாயமான அமெரிக்கர்கள் சடலமாக மீட்பு

Report Print Vethu Vethu in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

ஜப்பான் கடலில் சரக்கு கப்பலுடன் அமெரிக்க போர்க் கப்பல் மோதி விபத்துக்குள்ளாதில் 7 கடற்படை வீரர்கள் நேற்றைய தினம் காணாமல் போயிருந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன கடற்படை வீரர்கள் மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரம் காணாமல் போயிருந்த வீரர்களின் சடலங்கள் ஜப்பான் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட கடற்படை வீரர்களின் சடலங்கள் கடற்படை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உயிரிழந்த வீரர்கள் யார் என கண்டறியப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜப்பான் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு சரக்கு கப்பலும் அமெரிக்க போர்க்கப்பலும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் போர்க் கப்பலின் வலது புறத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் புகுந்தது. இந்த விபத்தில் மாயமான 7 கடற்படை வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

ஜப்பான் தலைநகர் டோக்யோவுக்கு தென்மேற்கே இசு தீபகற்ப பகுதியில் ஏசிஎக்ஸ் கிறிஸ்டல் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.

அப்போது ஜப்பானின் யோகோசுகாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற யுஎஸ்எஸ் பிட்ஸ்ஜெரால்டு என்ற போர்க்கப்பலும் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த பகுதியில் பயணம் செய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இரு கப்பல்களும் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இதில் போர்க்கப்பலின் வலப்புறத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டது. இதன் வழியாக கடல் தண்ணீர் கப்பலின் ஒரு பகுதிக்குள் ஊடுருவியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஜப்பான் கடலோர காவல் படையின் 5 கப்பல்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments