தொழுகை செய்துவிட்டு திரும்பிய இஸ்லாமியப் பெண் படுகொலை

Report Print Peterson Peterson in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிய இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள Reston நகரில் Nabra Hassanen(17) என்ற இஸ்லாமியப் பெண் வசித்து வந்துள்ளார். ரமலான் மாதம் என்பதால் அருகில் உள்ள மசூதி ஒன்றிற்கு சென்று தொழுகை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் நண்பர்களுடன் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் வந்த கார் ஒன்று திடீரென அவர்கள் முன்னிலையில் நின்றுள்ளது. காரில் இருந்த ஓட்டுனருக்கும் இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் கார் ஓட்டுனர் கீழே இறங்கி வந்து இஸ்லாமிய பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். இக்காட்சியை கண்ட நண்பர்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் இஸ்லாமியப் பெண் காணாமல் போயுள்ளார். பெற்றோர் மூலம் புகாரை பெற்ற பொலிசார் சில மணி நேரமாக அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

இந்நிலையில், பிற்பகல் 3 மணியளவில் Sterling என்ற பகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்றபோது சிதைந்த நிலையில் இருந்த சடலம் காணாமல் போன இஸ்லாமியப் பெண் என்பது உறுதி செய்யப்பட்டது.

சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் குற்றவாளியை தேடியபோது Darwin Martinez Torres என்ற நபர் அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் கார் ஓட்டிச்சென்றதால் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் இச்சம்பவத்திற்கு வேறு பின்னணி காரணங்கள் இருக்கின்றனவா என விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments