புற்றுநோயால் உயிருக்கு போராடிய காதலி: சர்பிரைஸ் தந்த காதலன்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் புற்றுநோயால் இறக்கும் தருவாயில் இருந்த இளம்பெண் ஒருவர் தமது உயிருக்கு உயிரான காதலனை கரம்பிடித்து தமது மிகப்பெரும் ஆசையொன்றை நிறைவேற்றியுள்ளார்.

மிச்சிகன் மாகாணத்தில் Lapeer East உயர்நிலைப் பள்ளியில் சக மாணவிகளைப் போன்று ஏராளமான கனவுகளை சுமந்துக் கொண்டு திரிந்த Katie Kirkpatrick என்பவருக்கு, நிக் காட்வின் என்ற ஆண் நண்பர் இருந்தார்.

எல்லோரையும் போலவே எதிர்காலம் குறித்த ஏகப்பட்ட நம்பிக்கையை கொண்டிருந்த கேட்டீக்கு மூளையில் புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டது முதலே, நம்பிக்கை சிறகுகள் ஒவ்வொன்றாக உதிரத் தொடங்கின.

நாளுக்கு நாள் பலவீனமடைந்து வந்த நிலையில், புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மூளையில் இருந்து புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக நீக்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக நுரையீரலை புற்றுநோய் செல்கள் பாதித்ததை அடுத்து, நுரையீரல் புற்றுநோய் தீவிரமடையத் தொடங்கியது.

ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு கனவுகள் சிதைந்து கிடந்தவருக்கு, காதலின் நினைவுக மட்டும் மனதில் நீங்கவில்லை.

உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஒட்டுமொத்த வாழ்வும் கேள்விக்குறியான நிலையில், தன்னுடைய நீண்டநாள் ஆண் நண்பர் நிக் காட்வினிடம் தனது காதலை வெளிப்படுத்த முடிவு செய்தார் கேட்டீ.

எத்தனை நாட்கள் உயிரோடு இருப்போம் என்பதே தெரியாத நிலையில் மருத்துவர்கள் எல்லோரும் கைவிட்ட நிலையிலும் தன் ஆசைக் காதலினிடம் திருமண ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

கேட்டீ தனது காதலை தெரிவித்ததும், மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்ட நிக் காட்வின், தானும் அவரை காதலித்து வந்ததை வெளிப்படுத்தியதுடன், நோயின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக திருமண ஏற்பாடுகளையும் தொடங்கியுள்ளார்.

திருமண விழாவின் முந்தையநாள் வரை சிகிச்சைக்காக படுக்கையில் இருந்தார் கேட்டீ. தனது வாழ்வில் மிக முக்கிய நாளான திருமணநாளில் ஒரு நோயாளியை போன்று தோற்றம் அளிக்க விரும்பவில்லை அவர்.

தான் மூச்சுவிட உதவும் ஆக்சிஜன் சிலிண்டரையும், மூச்சுக் குழாயையும் நீக்கினார். சுற்றமும் நண்பர்களும் சூழ தனது ஆசைக் காதலனை கேட்டீ கரம் பிடித்தார்.

தான் கண்ட பல கனவுகள் நிராசையாய் போன போதிலும், தனது ஆசைக்காதலனை கரம்பிடித்த மகிழ்ச்சி அவரது கண்களில் கண்ணீராக பெருக, எல்லோர் முன்னிலையிலும் காட்வினின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்ட படம் எல்லோர் நெஞ்சையும் கனக்க செய்வதாய் அமைந்தது.

கேட்டீயின் பெரிய ஆசையொன்று நிறைவேறியதாலோ என்னவோ, அவள் இவ்வளவு நாள் கையில் பிடித்துவைத்திருந்த உயிரை காற்றில் கரையவிட்டுவிட்டாள்.

ஆசைக்காதலனை கரம்பிடித்த 5-வது நாள் கேட்டீ, நுரையீரல் புற்றின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் காலமானார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments