சிறுவனை பட்டினி போட்டு பல விதமாக சித்ரவதை செய்த பெற்றோர்: உயிருக்கு போராடும் சிறுவன்

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

ஐந்து வயதான தங்களது வளர்ப்பு மகனை பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் Wisconsin மாகாணத்தை சேர்ந்தவர் Bradley Fahrenkrug (40). இவர் மனைவி Kimberly Fahrenkrug (38).

advertisement

இவர்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் உள்ள நிலையில் 5 வயதான சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தார்கள்.

சிறுவனை Bradleyயும், Kimberlyம் பலவிதமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார்கள். சரியாக சாப்பாடு தராமல் பட்டினி போட்டுள்ளார்கள்.

அதோடு தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டும், முதுகில் அதிக எடை கொண்ட பொருட்களை சுமந்து கொண்டும் சிறுவன் நடந்து செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார்கள்.

வளர்ப்பு மகனுக்கு சிறிதளவு உணவை கொடுத்த பெற்றோர் தாங்கள் பெற்ற குழந்தைகளுக்கு மட்டும் அதிகளவு உணவு கொடுத்து வந்துள்ளார்கள்.

இது போன்ற கொடுமையால் சிறுவனின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெறும் 13 கிலோ எடையுடன் அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

இது குறித்து வெளியில் தெரியவர பொலிசார் Bradley மற்றும் Kimberlyவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

அவர்கள் மீது குழந்தை புறக்கணிப்பு, தீங்கு மற்றும் காயம் எற்படுத்துதல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றம் சமீபத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளது.

சிறுவன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் இருக்கும் ஒருவர் கூறுகையில், பட்டினி மற்றும் சித்ரவதை செய்யப்பட்டதற்கு மோசமான உதாரணமாக சிறுவன் உள்ளான்.

பெரிய அளவில் சிறுவனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவன் உயிரிழக்க கூட வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments