பேஸ்புக்கில் கணவரை இலவசமாக விற்க முயன்ற பெண்ணிற்கு ஏற்பட்ட விளைவு

Report Print Basu in அமெரிக்கா
0Shares
0Shares
lankasri.com

அமெரிக்காவில் பேஸ்புக் மூலம் கணவர் விற்பனைக்கு என பதிவிட்ட பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

Teresa Turner என்ற பெண்ணே தனது கணவர் Robயை இணையத்தில் விற்க முயன்றுள்ளார்.

Teresa Turnerக்கு Misophonia அதாவது சத்தமாக உணவு அருந்துவதை கேட்டால் அவர் உடனே எரிச்சல் அடைந்துவிடுவார். இதை அறிந்த அவரின் கணவர் Rob, சிலர் சத்தமாக உணவருந்தும் வீடியோவை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

இதை கேட்டு எரிச்சலடைந்த Teresa Turner, அவரிடம் வீடியோவை நிறுத்தும் படி கோரியுள்ளார்.

ஆனால் Rob மறுக்க வேகமாக மாடிக்கு சென்ற Teresa Turner, Robஐ கடுப்பேற்ற கணவர் இலவசமாக விற்பனைக்கு என புகைப்படத்துடன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட Rob கவலைப்படாத நிலையில், சில மணிநேரங்களில் பல திருமணமாகத பெண்கள், Robஐ வாங்கிக்கொள்ளவதாக பதிவிட இதைக்கண்டு Teresa Turner மீண்டும் கடுப்பாகியுள்ளார்.

எனினும் Robஐ வாங்க யாரும் வீட்டிற்கு வராத நிலையில் கணவன், மனைவியின் சண்டை சமரசமாக முடிந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்