பேரணியில் அதிவேகமாக புகுந்து மக்களை தூக்கி வீசிய கார்: கமெராவில் பதிவான காட்சி

Report Print Basu in அமெரிக்கா
0Shares
0Shares
Cineulagam.com

அமெரிக்காவில் இடம்பெற்ற நாஸி எதிர்ப்பு ஆர்வலர்கள் பேரணியில் கார் ஒன்று அதிவேகமாக புகுந்த மக்களை தூக்கி வீசிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Charlottesville நகரில், இடம்பெற்ற நாஸி எதிர்ப்பு ஆர்வலர்கள் பேரணியிலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், பேரணியில் கலந்துக்கொண்ட ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாலையில் அமைதியாக பேரணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நாஸி எதிர்ப்பு ஆர்வலர்கள் மீது, ஒரு மர்ம நபர் காரை வேகமாக ஓட்டிச் சென்று மோதியுள்ளான்.

இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என பலர் விவரித்துள்ளனர். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் 20 வயதான James Alex Fields Jr என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

James Alex Fields Jr மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், தற்போது வரை தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவலை வெளியிடவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்