தரையில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகொப்டர்: டிரம்ப் ஆழ்ந்த இரங்கல்

Report Print Basu in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

அமெரிக்காவின் Charlottesville நகரில் நடத்தப்பட்ட கார் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Charlottesville நகரில் இடம்பெற்ற கார் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் ஹெலிகொப்டர் மூலம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

advertisement

இவ்வாறு கண்காணிப்பில் ஈடுபட்ட வந்த ஹெலிகொப்டர் ஒன்று, குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இதில், ஹெலிகொப்டரில் பயணித்த விமானி 48 வயதான எச். ஜே. கில்லன், மற்றும் 40 வயதான எம்.எம்.பேட்ஸ் இருவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்