பொலிசார் துரத்தியபோது நிகழ்ந்த கார் விபத்து: பரிதாபமாக பலியான 2 சிறுமிகள்

Report Print Peterson Peterson in அமெரிக்கா
222Shares
222Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் திருடப்பட்ட கார் ஒன்றை பொலிசார் துரத்தியபோது நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு சிறுமிகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓக்லோகோமா மாகாணத்தில் உள்ள உட்வார்ட் நகரில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று பிற்பகல் நேரத்தில் பாட்டியின் காரை திருடிய 14 வயது சிறுவன் தனது நண்பர்களை ஏற்றிக்கொண்டு பயணம் செய்துள்ளான்.

12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 14 வயது சிறுவன் உள்பட 5 பேர் காரில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், சாலையின் ஓரிடத்தில் காரை நிறுத்துமாறு பொலிசார் சைகை காட்டியுள்ளனர்.

ஆனாக், பொலிசாருக்கு அஞ்சிய சிறுவன் காரை நிறுத்தாமல் சென்றுள்ளான். சந்தேகமடைந்த பொலிசார் அந்த காரை துரத்தி சென்றுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு பின்னர், கட்டுப்பாட்டை இழந்த சிறுவனின் கார் வேகமாக சென்று தலைகீழாக உருண்டுள்ளது.

காரில் சீட் பெல்ட் அணியாத இரண்டு சிறுமிகளும் கார் கண்ணாடிகள் உடைத்துக்கொண்டு வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

எஞ்சிய 3 சிறுவர்களும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் சிறிய காயங்களுடன் காரில் அமர்ந்தவாறு உயிர் தப்பியுள்ளனர்.

ஆனால், தூக்கி வீசப்பட்ட இரண்டு சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிறுவனின் பெற்றோரிடம் பொலிசார் விசாரணை நடத்தியபோது ‘சிறிய குற்றங்கள் காரணாக சிறுவர்கள் சீர்த்திருத்தப்பள்ளியில் இருந்து நேற்று தான் எனது வெளியே வந்தான்.

ஆனால், வீட்டிற்கு வந்தவுடன் தனது பாட்டியின் காரை திருடிக்கொண்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்தில் இரண்டு சிறுமிகள் பலியானது தொடர்பாக தற்போது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்