அமெரிக்காவை புரட்டி எடுத்த இர்மா புயல்: தவிக்கும் மில்லியன்கணக்கான மக்கள்

Report Print Santhan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasri.com

அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடிய இர்மா புயல் காரணமாக 5 பேர் பலியாகியிருப்பதாகவும், மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாத காரணத்தினாலும், புயலின் தாக்கம் காரணமாகவும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பரிதவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது.

அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதுடன், மணிக்கு 130 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசி வருவதாகவும், தற்போது இதன் தாக்கம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இர்மா புயலின் காரணமாக தற்போது வரை 5 பேர் பலியாகியிருப்பதாகவும், ஏராளமானோர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் பெருமளவு உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மில்லியன்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாத காரணத்தினாலும், புயலின் கோரத்தாண்டவத்தினாலும் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் இந்த புயல் காரணமாக முதலைகள் போன்றவைகள் வீதிகளில் உலா வருவதால், மக்கள் சற்று அச்சத்துடன் உள்ளனர்.

புளோரிடாவைச் சேர்ந்த மக்கள் தங்கள் உடமைகளை இழந்துள்ளதால் அட்லாண்டாவில் உள்ள நான்கு ஆலயங்களும் மக்கள் தங்குவதற்காக திறந்து விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்