ஒன்பதாவது முறையாக தாத்தா ஆனார் டொனால்டு டிரம்ப்

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
Cineulagam.com

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகன் எரிக் டிரம்புக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு மகன்கள் மற்றும் மகள்கள் மூலம் ஏற்கனவே 8 பேரன், பேத்திகள் உள்ளனர்.

இந்நிலையில் டிரம்பின் மகன் எரிக்குக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் டிரம்ப் ஒன்பதாவது முறையாக தாத்தாவாகியுள்ளார்.

எரிக்- லாரா தம்பதியினருக்கு பிறந்துள்ள குழந்தைக்கு எரிக் ல்யூக் டிரம்ப் என பெயரிட்டுள்ளனர்.

பிறந்த குழந்தையின் புகைப்படத்தை எரிக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

பேரக்குழந்தை பிறந்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள டொனால்டு டிரம்ப், எரிக்- லாரா தம்பதியினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்