போட்டியில் வென்ற பணத்தை அகதிகள் நலனுக்கு தர முடிவு: சிறுவனின் நல்ல உள்ளம்

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

வினாடி வினா நிகழ்ச்சியில் $50,000 பரிசு வென்ற சிறுவன் அதில் பெரும்பகுதி பணத்தை அகதி குழந்தைகள் நலனுக்கு செலவிட முடிவெடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் எலிசபெத், இவர் மகன் சேஸ் மேக்னனோ (15) பள்ளி மாணவரான மேக்னனோ அந்நாட்டின் தனியார் தொலைக்காட்சி நடத்தும் வினாடி வினாடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

புத்திசாலியான மேக்னனோ குறித்த போட்டியில் $50,000 பரிசை வென்று சாதித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தாய் எலிசபெத் கூறுகையில், என் மகன் மூன்று வயதிலிருந்தே என்னிடம் பல கேள்விகள் கேட்டு தனது புத்திகூர்மையை வளர்த்து வந்தான்.

அவன் இந்த போட்டியில் வென்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

பரிசு வென்ற சிறுவன் கூறுகையில், வெற்றி பெற்ற பணத்தில் ஒரு பகுதியை அகதிகளாக இருக்கும் சிறுவர்களின் நலனுக்கு செலவிட விரும்புகிறேன்.

என் நண்பர்களுடன் சேர்ந்து JaxTHRIVE என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறேன், அதன் மூலம் இதை செய்யவுள்ளேன்.

அகதிகள் கடுமையாக உழைக்கிறார்கள் எனவும், அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தனது ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அகதி மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதை மேக்னனோ வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்