கைது செய்ய முயன்ற பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற மாணவன்

Report Print Peterson Peterson in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் கைது செய்ய முயன்ற பொலிஸ் அதிகாரியை மாணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் டெக் பல்கலைக்கழத்தில் மாணவன் ஒருவன் போதை மருந்து வைத்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் நேற்று காலை நேரத்தில் மாணவன் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார்.

மாணவனின் அறையை சோதனை செய்தபோது போதை மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாணவனை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு பொலிசார் செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த மாணவன் பொலிஸ் அதிகாரியின் தலையை குறி வைத்து சுட்டுவிட்டு தப்பியுள்ளான்.

இச்சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பொலிஸ் அதிகாரி அதே இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இத்தாக்குதல் குறித்து தகவல் பெற்ற பொலிசார் தனிப்படையை அனுப்பி மாணவனை தேடியுள்ளனர்.

சில மணி நேர வேட்டைக்கு பின்னர் மாணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

இச்சம்பவம் குறித்து டெக்சாஸ் மாகாண ஆளுநர் உயிரிழந்த பொலிசாரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் மாணவன் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றதை தொடர்ந்து பல்கலைக்கழகம் முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்