சிறைக்குள் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள்.. பலர் படுகாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் அமைந்துள்ள சிறை ஒன்றில் கைதிகள் கலவரத்தில் ஏற்பட்டு சிறையை தகர்க்க முயன்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கலவரத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சம்பவப்பகுதிக்கு பொதுமக்கள் எவரும் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

advertisement

வட கரோலினா பகுதியில் அமைந்துள்ள Pasquotank correctional மையத்திலேயே சிறையை தகர்க்கும் பொருட்டு கலவரம் வெடித்துள்ளது.

சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் சிறைக்கு நெருப்பு வைத்துள்ளதாகவும், இதில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களை அப்பகுதி வழியாக செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாடசாலைகளில் இருந்து குடியிருப்புக்கு திரும்பும் மாணவர்களை பாதிவழியிலேயே நிர்வாகத்தினர் மீண்டும் பாடசாலைகளுக்கே திரும்ப உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

900 கைதிகள் சிறை வைக்கப்பட்டிருக்கும் குறித்த வளாகத்தில் தற்போது பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்