ஐஸ்வர்யா ராயை தனியாக சந்தித்தாரா பாலியல் புகாரில் சிக்கிய ஹாலிவுட் தயாரிப்பாளர்?

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
Seylon Bank Promotion

பிரபல ஹாலிவுட் நடிகைகள் பலரை பாலியல் துன்புறுத்தலுக்கு இரையாக்கியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான தயாரிப்பாளர் நடிகை ஐஸ்வர்யா ராயையும் குறிவைத்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையும் நடிகர் அமிதாப் பச்சனின் மருமகளுமான ஐஸ்வர்யா ராய் பச்சன், கடந்த 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டில், தற்போது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்ற பிரபல தயாரிப்பாளரை சந்தித்து பேசியுள்ளதாக, ஐஸ்வர்யா ராயின் அப்போதைய மேலாளராக செயல்பட்ட Simone Sheffield தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பை அடுத்து ஹொட்டல் அறையில் தங்கியிருந்த ஐஸ்வர்யா ராயை தனியாக சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி தயாரிப்பாளர் ஹார்வி பல முறை சிமோன் ஷெஃபீல்டிடம் மன்றாடியுள்ளார்.

ஆனால், ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தார் தம்மை நம்பி அவரை ஒப்படைத்துள்ளதாகவும், தாம் அவரது மேலாளராக இருக்கும் மட்டும் அந்த எண்ணம் ஈடேறாது எனவும் தயாரிப்பாளர் ஹார்வியிடம் சிமோன் கடுமையான வார்த்தைகளால் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் தமது புதுப்பட சர்ச்சைகளுக்காக ஹாலிவுட்டின் சில முக்கிய நபர்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது எனக் கூறும் சிமோன், அப்போதெல்லாம் அவரது அறையின் வெளியே அவருக்காக காத்திருந்தேன். ஆனால் ஹார்வியுடனான சந்திப்பின்போது தாம் ஐஸ்வர்யா ராயின் பக்கத்தில் அவருடனே இருந்ததாகவும் சிமோன் தற்போது வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் ஹார்வி பலமுறை தம்மிடம் கேட்டும் தாம் முடியாது என்ற ஒற்றைப்பதிலையே அவருக்கு அளித்து வந்ததாக கூறும் சிமோன்,

கடைசியில், ஐஸ்வர்யா ராயை தனிமையில் சந்திக்க நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என ஹார்வி நேரிடையாகவே தம்மிடம் பேசியதாகவும் சிமோன் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு ஆபாச வார்த்தை ஒன்றை அவருக்கு பதிலாக அளித்ததாக கூறும் சிமோன், தமது மேற்பார்வையில் இருந்த அந்த சில மாதங்கள் ஹார்வியின் பிடியில் சிக்காதவாறு ஐஸ்வர்யா ராயை பாதுகாத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 2014 ஆம் ஆண்டு வரை ஹார்வி தொடர்ந்து ஐஸ்வர்யா ராயுடன் தனியாக நேரத்தை செலவிட முயன்று வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்