அமெரிக்காவில் இலங்கையரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

Report Print Vethu Vethu in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் இலங்கையர் ஒருவரை கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Beaumont பகுதியை சேர்ந்த Chandler Kyle Ventress என்ற இளைஞருக்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

22 வயதுடைய இளைஞர் தனது 19வது வயதில் இலங்கையர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இவ்வாறு ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு கடை உரிமையாளரான மெட்டானந்தா குருப்பு என்ற 52 வயதுடைய இலங்கையர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 11ம் திகதி Jefferson County ஜீரிக்கு முன்னால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது பல மணி நேர விவாதத்தின் பின்னர் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Pick-N-Shop கடையின் உரிமையாளரான கருப்பு இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும். அவர் மார்பில் இரு முறை சுட்டுக் கொல்லப்படுள்ளார்.

கருப்பை சுட்ட குற்றவாளிக்கு அப்போது 19 வயதென தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த கொலை சம்பவம் கருப்புவின் கடையில் இருந்த கண்கானிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

அந்த கண்காணிப்பு கமரா காணொளியில் குருப்பு உயிருக்கு போராடும் காட்சி பதிவாகியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து குருப்புவின் குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் சட்டம் தொடர்பில் தாம் இன்று பெருமைப்படுவதாக குருப்புவின் மகள் தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அமெரிக்காவின் Beaumont பகுதிக்கு சென்ற குருப்பு, 2013 ஆம் ஆண்டு Pick-N-Shop கடையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்