அமெரிக்காவிற்கு இந்தியா உதவ வேண்டும்: அமெரிக்க தூதர் கோரிக்கை

Report Print Thayalan Thayalan in அமெரிக்கா
0Shares
0Shares
Cineulagam.com

பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு இந்தியா தனது உதவியினை வழங்க வேண்டும் என ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியா மற்றும் அமெரிக்கநாடுகளுக்கு இடையேயான நட்புறவு சபைக் கூட்டத்தின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், தீவிரவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும் அவர்களின் புகலிடங்களை அழிக்கும் செயற்பாடுகளுக்காகவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஆசிய நாடுகளின் மீது அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்தியாவுடனான பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு நாம் ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றோம் எனவும் நிக்கி ஹேலி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று தீவிரவாதிகளை வளர்த்து வரும் பாகிஸ்தான் மீது அமெரிக்க அதிபர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார் எனக் கூறிய அவர், தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் எந்தநாட்டையும் அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்ற விடயத்தினை பாகிஸ்தான் இந்தியா இந்த இரு நாடுகளும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி செயற்பாடுகளுக்கு அமெரிக்காவிற்கு இந்தியா தனது பங்களிப்பினை வழங்க வேண்டும் எனவும் நிக்கி ஹேலி மேலும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்