வெவ்வேறு ஆண்டில் பிறந்த அதிசய இரட்டையர்கள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
lankasri.com

பொதுவாக இரட்டையர்கள் என்றாலே ஒரே மணி நேரத்தில் பிறப்பது வழக்கம். ஆனால் அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகள் இருவரும் வெவ்வேறு ஆண்டில் பிறந்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆண் மற்றும் பெண் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் இருவரும் பிறந்த வருடம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரியா என்ற பெண்மணிக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

அப்போது டிசம்பர் 31 ஆம் திகதி, 2017 ஆம் ஆண்டு சரியாக இரவு 11.58 மணிக்கு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அதனையடுத்து 20 நிமிட இடைவெளியில் ஜனவரி 1, 2018 ஆம் ஆண்டு மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இரட்டை குழந்தைகளின் பிறந்த ஆண்டு மாறியுள்ளது.

குறித்த பெண்மணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஒருவர், தனது 35 வருட மருத்துவ சேவையில் இரட்டை குழந்தைகள் பிறந்த ஆண்டுகள் இது போன்று மாறியதில்லை என வியப்புடன் தெரிவித்துள்ளார்.

பிறந்த ஆண்டுகள் மாறிப்போன இந்த இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்