டிரம்ப் டவரில் பயங்கர தீ விபத்து

Report Print Fathima Fathima in அமெரிக்கா
0Shares
0Shares
lankasri.com

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

58 மாடிகள் கொண்ட டிரம்ப் டவரின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், காலை 7.20 மணியளவில் தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்ற தளங்களுக்கு தீ பரவாத வண்ணம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரையிலும் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஜனாதிபதி டிரம்ப் வாஷிங்டனில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை அணைக்கும் பணியில் 84 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிறிதளவில் காயம் ஏற்பட்டுள்ளது மற்றும் இரண்டு குடிமகன்கள் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்