சிலந்தியை கொல்ல வீட்டை கொளுத்திய நபர்

Report Print Kabilan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் நபர் ஒருவர் சிலந்தி பூச்சியை கொல்ல முயன்றபோது வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

அவரின் வீட்டில் மிகப்பெரிய சிலந்தி பூச்சி ஒன்று இருந்துள்ளது. அதனை அவர் அடிக்க முயன்றபோது அது தப்பிக்கவே, ’Burner' மூலமாக தீயிட்டு கொல்ல முயன்றுள்ளார்.

அப்போது அந்த வீட்டில் இருந்த திரைச்சீலை தீப்பிடித்துள்ளது, இதனால் வீடு முழுவதும் தீப்பற்றியுள்ளது.

உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர்.

முன்னதாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது, இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்