காதலனுடன் சேர்ந்து 4 வயதை மகளை கொடூரமாக கொன்ற தாய்

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் காதலனுடன் சேர்ந்து 4 வயது மகளை வெந்நீரீல் முக்கி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் மிச்சிகன் மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, கயில் பேரட் மற்றும் காண்டீஸ் டயஸ் (24) தம்பதிக்கு கேப்ரில்லா பேரட் (4) என்ற மகள் உள்ளார்.

இதனிடையில் டயஸுக்கு பிராட் பீல்ட்ஸ் (28) என்ற ஆணுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

தனது காதலருடன் சேர்ந்து பேரட்டை டயஸ் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று தனது வீட்டில் இருந்த குளியல் தொட்டியில் கொதிக்கும் வெந்நீரை நிரப்பி அதில் பேரட்டை மூழ்கடித்துள்ளனர்.

உடல் முழுவதும் பேரட்டுக்கு வெந்து போன நிலையில் சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பேரட்டை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் அங்கு உயிரிழந்தார்.

இதையடுத்து பிராட்டும், டயஸும் பொலிசுக்கு பயந்து தலைமறைவானார்கள். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் பொலிசார் இருவரையும் ஜார்ஜியாவில் வைத்து கைது செய்துள்ளனர்.

விசாரணையில் இருவருக்குமே மனநல கோளாறு இருப்பதும் அதற்கு அவர்கள் சிகிச்சை பெறாமல் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

டயஸ் வீட்டிலிருந்து கோக்யன் போதை பொருளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையில் டயஸ் வீட்டில் நடந்த விடயம் குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை என சிறுமி பேரட்டின் தந்தை கயில் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்