பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: மீண்டும் இணைகிறதா அமெரிக்கா?

Report Print Harishan in அமெரிக்கா
26Shares
26Shares
lankasrimarket.com

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டால் மீண்டும் இணைவதில் எந்த தயக்கமும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

‘குளோபல் வார்மிங்’ என்கின்ற உலக வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா உள்ளிட்ட 187 நாடுகள் இணைந்து பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த ஜூன் மாதம் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு காரணமாக அமெரிக்காவிற்கு அந்த ஒப்பந்தம் மூலம் எந்த பயனும் இல்லை என ட்ரம்ப் காரணம் தெரிவித்ததால் அது குறித்து எந்த தலைவரும் கருத்து தெரிவிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் நேற்று டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியபோது பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப் கூறுகையில், ஒபாமா கையெழுத்திட்ட பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவிற்கு சாதகமான அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை, அதில் மாற்றம் கொண்டுவரும் பட்சத்தில் மீண்டும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்காவிற்கு சாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு, அமெரிக்கா மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்