451 மில்லியன் டொலர்கள்: 20 வயது இளைஞருக்கு லாட்டரியால் அடித்த அதிர்ஷ்டம்

Report Print Harishan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasri.com

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பல மில்லியன் டொலர்கள் லாட்டரி மூலம் கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நிதி மேலாண்மை பயின்று வரும் 20 வயது இளைஞர் ஷேன் மிஸ்லர்.

போர்ட் ரிச்சி பகுதியில் லாட்டரி சீட்டு வாங்கிய அந்த இளைஞரின் லாட்டரிக்கு 451 மில்லியன் டொலர்கள் அதிர்ஷ்டமாக அடித்துள்ளது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து Tallahassee-இல் உள்ள லாட்டரி தலைமை அலுவலகத்துக்கு தனது தந்தை மற்றும் வழக்கறிஞருடன் சென்று லாட்டரியில் அடித்த தொகையை கோரியுள்ளார் மிஸ்லர்.

மிஸ்லரை நிர்வாகியாக கொண்டு "Secret 007, LLC" என்னும் புதிய தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதன் வங்கி கணக்கில் முதற்கட்டமாக $282 மில்லியன் டொலர் பணத்தை டெபாசிட் செய்ய லொட்டரி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மிஸ்லர் கூறுகையில், நிதி மேலாண்மை தேர்வு நேரத்தில் இந்த பணம் எனக்கு கிடைத்திருப்பது எனது கல்விக்கு உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் கிடைத்த பணத்தை கொண்டு ஏழை எளியோருக்கு உதவ உள்ளதாகவும் குடும்பம் மற்றும் எதிர்கால திட்டங்களுக்கு பயன்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்