ஏவுகணை தாக்குதல் நிகழப்போகிறது: மக்களை பயமுறுத்திய பொய்யான செய்தி

Report Print Fathima Fathima in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

ஹவாயில் காட்டுத்தீ போல் பரவிய பொய்யான குறுஞ்செய்தியால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயினர்.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை ஹவாய் மக்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று பரவியது.

அதில், பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை ஹவாய் எதிர்நோக்கி உள்ளது, அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் மக்கள் அச்சமடைந்தனர், எனினும் சிறிது நேரத்தில் பொய்யான தகவல் என தெரியவந்தது.

ஊழியர்கள் செய்த தவறினாலே இத்தவறு நிகழ்ந்ததாகவும், மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்