உயிர் காக்கும் மருந்துகளுக்கு விலை உயர்த்திய விவகராம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Arbin Arbin in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் எய்ட்ஸ் மருந்துகளுக்கு 5,000 மடங்கு விலை உயர்த்தியதால் பிரபலமடைந்த முன்னாள் மருந்து நிறுவன தலைவருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் மருந்து நிறுவன உரிமையாளராக இருந்த Martin Shkreli(34) கடந்த 2015 ஆம் ஆண்டு Daraprim என்ற உயிர் காக்கும் மருந்தை தனது நிறுவனத்தின் சார்பில் வாங்கி அதன் விலையை 750 டொலர் என உயர்த்தினார்.

இந்த அதிரடி விலை உயர்வு அமெரிக்கா மட்டுமின்றி உலகமெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உயிர் காக்கும் எய்ட்ஸ் மருந்தின் விலையை உலக நாடுகளின் தேவையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி சுமார் 5000 மடங்கு உயர்த்தினார் மார்ட்டின்.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முறைகேடு தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 75,000 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தமது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதாகவும் மார்ட்டின் கூறியுள்ளார்.

தற்போது தலா 750 டொலர் மதிப்பு கொண்ட எய்ட்ஸ் மருந்தின் விலையை முன்னர் புழக்கத்தில் இருந்த அதே விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் காங்கிரஸ் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்