அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனிப்பொழிவினால் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
அமெரிக்காவின் Minnesota மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
இதேபோல் மெக்சிகன் மாகாணத்தில் பனியால் ஏற்பட்ட மின்தடையால், அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
அப்பகுதியில், தற்போது வரை 46 செண்டிமீட்டர் அளவுக்கு பனி பொழிந்து வருவதால், ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பலத்த காற்றுடன் பனிப்புயல் வீசி வருவதால், 1000க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. அத்துடன், 160 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சாலையில் தேங்கியுள்ள பனியை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


