பெற்ற மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை: குழந்தை பெற்றெடுத்த பரிதாபம்

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் பெற்ற மகளை தொடர்ந்து தந்தை பலாத்காரம் செய்த நிலையில் மகள் கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் கிரிஜோரி ஆண்ட்ரி (37). இவருக்கு திருமணமான நிலையில் ஆறு பிள்ளைகள் உள்ளனர்.

இதில் ஒரு பெண் பிள்ளைக்கு 20 வயதாகிறது. மகள் மீது தவறான எண்ணம் கொண்ட ஆண்ட்ரி சில ஆண்டுகளாக அவரை பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கர்ப்பமான மகள் கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அப்போது தான் இந்த விடயம் ஆண்ட்ரியின் மனைவிக்கு தெரியவர அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து ஆண்ட்ரி மீது அவர் மனைவி பொலிஸில் புகார் அளித்த நிலையில் ஆண்ட்ரி கைது செய்யப்பட்டார்.

மேலும், கணவர் ஆண்ட்ரியை விவாகரத்து செய்ய அவர் மனைவி நீதிமன்றத்தில் தற்போது விண்ணப்பித்துள்ளார்.

இதனிடையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை முதலில் மறுத்த ஆண்ட்ரி பின்னர் தனது மகளுக்கு பிறந்த குழந்தையின் தந்தை தான் என்பதை ஒப்பு கொண்டுள்ளார்.

இதையடுத்து மகளுடன் இனி தொடர்பு கொள்ள ஆண்ட்ரிக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அவரின் ஜாமீன் தொகையாக $60,000 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் 26-ஆம் திகதி அவரிடம் நீதிமன்ற விசாரணை நடைபெறவுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்