கடவுள் உருவத்தை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானிகள்

Report Print Trinity in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

கடவுள் உருவம் இப்படிதான் இருக்கும் என வடகரோலினா விஞ்ஞானிகள் ஒரு உருவத்தை உருவக்கியுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

கண்காணாத கடவுளை இதுவரைக்கும் மக்கள் அவரவர் நம்பிக்கையின் படி வழிபட்டு வந்துள்ளனர். இப்போது விஞ்ஞானிகள் கடவுள் உருவத்தின் மாதிரி வடிவத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

பழையகாலத்து மனிதரை போலவும் இளைஞனை போலவும் அவர் அந்த படத்தில் தென்படுகிறார். பெண்மை வாய்ந்த அந்த முகத்தில் கருணை நிரம்பி வழிகிறது.

இதற்கென சேப்பர் ஹில்லில் உள்ள வடகரோலினா பல்கலைக்கழக உளவியலாளர் குழுவானது 511 அமெரிக்க கிறிஸ்தவர்கள் மூலம் இந்த கடவுளின் ஓவியத்தை உருவாக்கியது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த கடவுளின் உருவ மாதிரியை தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெடுத்த மாதிரிகளை ஒன்றிணைத்த விஞ்ஞானிகள் அதன் முடிவை பார்த்து அவர்களே ஆச்சரியப்பட்டனர்.

இந்த ஓவியம் பார்ப்பதற்கு மோனாலிசாவை நினைவுபடுத்துவதாக கூறப்பட்டாலும் கடவுளின் உருவம் வெள்ளை நிறமும் தீக்ஷண்யமான பார்வையும் கருணை நிறைந்த புன்னகையுமாக இருப்பது கடவுளின் உருவத்தோடு பாந்தமாக பொருந்தி போகிறது.

லிபரல்ஸ் கடவுள் மென்மையானவராகவும் பெண்மை நிறைந்தவராகவும் இளமையோடும் இருப்பதாக அனைவரும் கற்பனை செய்திருந்ததாகவும் தற்போது அதே போன்ற ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டு மக்களின் கற்பனைகளையும் ஒன்றாக்கி உருவாக்கப்பட்ட கடவுள் இவர் என்றும் தெரியவருகிறது.

அனைவரின் சமமான விருப்பப்படி ஆண்மையுள்ள தேவனை உருவாக்கியதாக அந்த விஞ்ஞானிகள் குழு தங்களது ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்