குவாட்டமாலாவில் அடுத்த எரிமலை வெடிப்பு.. மீண்டும் மக்கள் வெளியேற்றம்

Report Print Trinity in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

குவாட்டமாலாவில் அடுத்ததாக பகாயா எரிமலையும் சீற ஆரம்பித்திருக்கிறது. ஆகவே அங்குள்ள மக்களை அவசர அவசரமாக வெளியேற்றி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சர்வதேச விமான தலமான லா ஆரோரா வும் மூடப்பட்டுள்ளது.

இங்குள்ள பியூகோ எரிமலை கடந்த முறை வெடித்ததில் 100கும் மேற்பட்டோர் பலியானார்கள், 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள். பல கிராமங்கள் புதைந்தன.

இந்நிலையில் குவாட்டமாலாவிலிருந்து 48கிமி தூரமுள்ள எரிமலையான பகாயா எரிமலை தனது சீற்றத்தை தொடங்கியிருக்கிறது. மீண்டும் சாம்பல் துகள்களால் அப்பகுதியே மூடப்பட்டிருக்கிறது. 11,481 அடிக்கு சாம்பலும் வாயுக்களும் வெளியாகின்றன.

ஆகவே பகாயா எரிமலை இன்னும் சில நாட்களில் தனது எரிமலை குழம்புகளை வெளியேற்ற ஆரம்பிக்கும் என்பதால் அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்