நாயின் சிறுநீரை குடிக்கும் அழகி! இதற்காக தானாம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
1385Shares
1385Shares
lankasrimarket.com

ஒரு காலத்தில் மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு முகம் முழுவதும் முகப்பருக்களால் நிறைந்து எப்போதும் சோகமாக இருந்த ஒரு பெண், தற்போது ஜொலிக்கும் முக அழகுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் இதுதான் எனக் கூறும் ஒரு வீடியோ வெளியாகி காண்போரை முகம் சுளிக்கச் செய்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெயர் வெளியிடாத ஒரு பெண் தனது அழகுக்கும் ஜொலிப்புக்கும் காரணம் இதுதான் என்று கூறி தனது நாயின் சிறுநீரைப் பிடித்து ரசித்துக் குடிக்கிறார்.

சற்றும் அருவருப்பு இன்றி அவர் செய்யும் இந்த செயல் காண்போருக்கு குமட்டலை ஏற்படுத்துகிறது.

நாயின் சிறுநீரில் வைட்டமின் A, வைட்டமின் E மற்றும் கால்சியம் இருப்பதோடு புற்று நோயைக் குணமாக்கவும் அது உதவும் என்கிறார் அவர்.

புராதன சீனா, ரோம், கிரீஸ் மற்றும் எகிப்தில் நாய் அல்லது மனித சிறுநீரை மருத்துவக் காரணங்களுக்காக குடிக்கும் வழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் நாயின் சிறுநீரில் பல நச்சுப் பொருட்களும் அமிலங்களும் இருப்பதால் அதை குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்