கடல்சீற்றம் அதிகம்! மீன்பிடித் தொழிலாளர்கள் கவனம்

Report Print Aasim in காலநிலை
112Shares
112Shares
lankasrimarket.com

கடல் சீற்றம் அதிகமாக காணப்படக்கூடும் என்பதால் மீன்பிடித் தொழிலாளர்கள் கவனமாக நடந்து கொள்ளுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வானிலை அவதான நிலையம் இன்று விடுத்துள்ள கால நிலை அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசத்தில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படலாம்.

குறித்த பிரதேசங்களில் ஆழ்கடல் பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதுடன் அப்பிரதேசங்களில் காற்றும் திடீர் என்று மணித்தியாலத்துக்கு 70-80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே குறித்த பிரதேசங்களில் கடலுக்குச் செல்வதை மீனவர்கள் தவிர்த்துக் கொள்வதுடன், அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதே ​நேரம் மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி வரையான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் இருக்கும் என்பதால் கடற்படையினர் அவதானமாக இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்