50 வயதிலும் அசத்தும் பெண்! அப்படி என்ன செய்து விட்டார்?

Report Print Raju Raju in பெண்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

திரைப்படம், புத்தகம் போன்றவற்றில் வரும் கதாபாத்திரங்களை போல விதவிதமான உடைகளில் அசத்தும் 50 வயது பெண்ணின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் வசிப்பவர் சோலாஞ் அமோரிம் (50), இவருக்கு சிறுவயதிலிருந்தே மாறுவேட போட்டிகள் என்றால் ஆர்வம்.

வளர்ந்த பின்னர் மாறுவேடங்கள் போட்டியில் கலந்து கொள்வதை அமோரிம் குறைத்து கொண்டார்.

இந்நிலையில், திடீரென அமோரிமின் தோழி சிறுவயது போல இப்போதும் பிரபல கதாபாத்திரங்கள் போல மாறுவேடம் போடமுடியுமா என அவரிடம் கேட்டுள்ளார்.

இதை சவாலாக எடுத்துகொண்ட அமோரிம் திரைப்படங்கள், புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள் அணியும் உடைகளை அணிந்து அசத்தலாக வலம் வருகிறார், இதற்கு அவரின் தோழியும் உதவியுள்ளார்.

இதுகுறித்து அமோரிம் கூறுகையில், உடை, அலங்காரம், பாவனை எல்லாம் மாற்றிக்கொண்டு இன்னொரு கதாபாத்திரமாக மாறுவது சாதாரண விடயமில்ல.

முதலில் வயதான தோற்றம் போட்டேன், அதோடு ஒரு மாறுவேட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசையும் வென்றேன் என கூறியுள்ளார்.

தற்போது பிரபல கதாபாத்திரங்கள் போல் ஆடை, அலங்காரம் செய்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறேன், எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது

எனக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது, 50 வயதில் இந்தளவு பிரபலமாவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்