உலகின் டாப் 10 மாடல் அழகி: இந்தியாவில் கொள்ளை பிரியமாக விரும்புவது இதைதான்

Report Print Printha in பெண்கள்
0Shares
0Shares
Cineulagam.com

உலகின் டாப் 10 சூப்பர் மாடல்களில் ஒருவரான 47 வயதினை உடைய நவோமி கேம்பெல் ஒரு கருப்பினத்தை சேர்ந்த பெண்.

இவர் மாடலிங் உலகில் ஜொலித்தது வெறும் அதிர்ஷ்டத்தினால் மட்டுமல்ல, அந்த இடத்தை அடைவதற்கு நவோமி கடுமையாக கஷ்டப்பட்டுள்ளார்.

ஆனால் இவர் அதற்காக உணவுக் கடுப்பாடு, உடற்பயிற்சி என்றெல்லாம் தன்னை வருத்துக் கொள்ளாமல், தன் மனதை கவலைகள் இன்றி நிம்மதியாக வைத்துக் கொண்டாலே போதும் என்கிறார்.

அதனால் இவர் தன் மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க வாய் விட்டு அழுவது, துணையுடன் சண்டையின் போது கடுமையான வார்த்தைகளினால் திட்டு விடுவது போன்றவை தன்னை ரிலாக்ஸ் அடைய செய்யும் மிகச் சிறந்த நிவாரணம் என்று கூறுகிறார்.

இந்த கருப்பழகி நவோமிக்கு இந்தியா என்றாலும் இந்திய உடைகள் என்றாலும் கொள்ளை பிரியமாம்.

இவர் இந்தியா வருவதோடு மட்டுமில்லாமல் இந்தியாவில் பிரபலமான 6 கஜப்புடவை, லெஹங்கா, டிசைனர் ஆர்ட் புடவைகள் என்று அனைத்தையும் அணிவாராம்.

இதற்காக இந்தியாவில் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் மற்றும் இவரின் நண்பரான மனீஷ் மல்ஹோத்திரா என்பவர் உதவுகிறார்.

இவர், நவோமிக்கு அவருக்கேற்ற வகையில் இந்திய புடவைகள் மற்றும் மற்ற பிற உடைகளை வடிவமைத்து கொடுப்பாராம்.

அதுவும் நவோமி இந்தியா வரும் ஒவ்வொரு முறையும் மனீஷ் அவருக்கு தேவையான புதுவித புடவைகளை டிசைன் செய்து தயார் நிலையில் வைத்திருப்பாராம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்