மாதவிடாய் காலத்தில் இதை செய்ய வேண்டாம்: பெண்களுக்கு அவசியமான தகவல்

Report Print Fathima Fathima in பெண்கள்
1259Shares
1259Shares
lankasrimarket.com

ஒரு பெண் பருவமடைந்து முழுமை அடைய மாதவிடாய் தான் முதல் படி, நமது உடல் ஆரோக்கியம் மற்றும் கருப்பையின் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் அறிகுறியாகவும் திகழ்கிறது.

அந்த மூன்று நாட்களில் பெண்கள் படும் துயரம் சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியமில்லை.

மனரீதியாக, உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டிவரும், அக்காலகட்டத்தில் இந்த மூன்று விடயங்களை செய்யாமல் இருங்கள்.

  • அந்த நாட்களில் உடலை வருத்திக் கொண்டு கடினமாக வேலைகளை செய்ய வேண்டாம், அவ்வாறு செய்தால் ரத்தப்போக்கு அதிகமாவதுடன் மேலும் பலவீனமாகலாம்.
  • சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது அவசியம், வயிறு வலிக்கிறது, உடல் சோர்வாக இருக்கிறது என காரணத்தை காட்டி உணவை ஒதுக்குவது உடல்நிலையை மேலும் மோசமடையத்தான் செய்யும், தேவையான சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம்.
  • நாப்கீன்களை நிச்சயம் 4 அல்லது 5 மணிநேரத்துக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும், வெளியேறும் ரத்தத்தில் இருந்து உருவாகும் கிருமிகளை நோயத்தொற்றுக்கு வழிவகுக்கும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்