சிறுநீரக தொற்றால் அவதிப்படும் பெண்களுக்கு

Report Print Fathima Fathima in பெண்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

சுகாதாரமற்ற கழிப்பறையை பயன்படுத்துவது, சிறுநீரை அடக்குவது, தண்ணீரை குறைவாக அருந்துவது, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பது போன்ற காரணங்களினால் பெண்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுகிறது.

குறிப்பாக வெயில் காலங்களில் இந்த தொந்தரவினால் பெண்கள் அதிகம் அவஸ்தைப்படுவார்கள்.

இதனால் அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், குறைவாக சிறுநீர் வெளியேறுவது என பல உபாதைகளை சந்திக்க நேரிடும்.

  • இதற்கு முதலில் தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.
  • தண்ணீரில் வெட்டி வேர் போட்டும் குடிக்கலாம், சூடான நீரில் சீரகத்தை போட்டு கசாயம் செய்து குடிக்கலாம்.
  • மோரில் அல்லது இளநீரில் வெந்தயத்தை ஊறவைத்து குடிக்கலாம்.
  • நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பூசணி, சௌசௌ, சுரைக்காய் போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தர்பூசணி, திராட்சை, கிர்ணிப்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம்.
  • வெள்ளரிக்காயை பச்சையாகவோ அல்லது பச்சடி செய்தோ சாப்பிடலாம், சோற்றுக்கற்றாழை ஜெல்லை சாப்பிடலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்