77 பேருடன் பயணமான விமானம் விழுந்து நொறுங்கியது

Report Print Dias Dias in உலகம்
0Shares
0Shares
lankasrimarket.com

நேபாளத்தின் காத்மண்டு சர்வதே விமான நிலையத்தில் 77 பேருடன் பயணித்த விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 38 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 23 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக காத்மாண்ட் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.

முதல் இணைப்பு- 77 பேருடன் பயணமான விமான விழுந்து நொறுங்கியது

நேபாளத் தலைநகர் காத்மாண்ட் நகருக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த யு.எஸ். பங்களா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படுகிறது.

இன்று வங்கதேச தலைநகர் தாகாவில் இருந்து, யு.எஸ்.பங்களா நிறுவனத்துக்கு சொந்தமான பிஎஸ்-211 என்ற விமானம், உள்ளூர் நேரப்படி இன்று நண்பகல் 2.30 மணி அளவில் காத்மாண்ட் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, அதன் அருகே இருக்கும் கால்பந்து மைதானத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் விமான ஊழியர்களுடன் சேர்த்து மொத்தம் 78 பேர் வரை பயணம் செய்ததாக காத்மாண்ட் போஸ்ட் நாளேடு தெரிவித்துள்ளது.

விபத்து நேரிட்டதும் மீட்பு பணிகள் துரிதமாக தொடங்கப்பட்ட நிலையில், மோசமான காலநிலையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து விமான நிலைய செய்தித் தொடர்பாளர் பிரேந்திரா பிரசாத் பேசுகையில், நாங்கள் விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறோம், விரைவில் விரிவான தகவல்களை தெரிவிப்போம் என கூறிஉள்ளார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்