ஆன்ட்ராய்டு டிவி ஆப்! டுவிட்டரின் புதிய அறிமுகம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இண்டர்நெட் உலகத்தில் அதிக மக்கள் விரும்பும் சமூக வலைதளங்களில் ட்விட்டருக்கு என்றுமே தனி இடம் உண்டு.

இந்நிலையில், ட்விட்டர் வலைதளமும் தனது பயன்பாட்டாளர்களுக்கு புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த வரிசையில், தற்போது ஆன்ட்ராய்டு டிவி ஆப் என்ற புதிய ஆப்பை வழங்கியுள்ளது.

இதன் மூலம், டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்யப்படும் செய்திகளை பார்ப்பதோடு, தற்போது நேரடி ஒளிபரப்புகளையும் காணக்கூடிய ஆண்ட்ராய்டு டிவி ஆப் பயன்பாட்டை டுவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய வசதியானது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது மட்டுமல்லாது, இதனுடன் மற்றொரு புதிய வசதியும் தரப்பட்டுள்ளது.

அதாவது இதுவரை காலமும் உங்களை மற்றொருவர் பின்தொடர வேண்டும் என்றால் Follow என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

ஆனால் புதிய வசதியின்படி QR Code ஒன்றினை ஸ்கான் செய்வதன் ஊடாக விரும்பியவர்கள் உங்களை பின்தொடர முடியும்.

இவ் வசதியினை செயற்படுத்துவதற்கு Profile > Gear > QR Code என்ற படிமுறையில் சென்று செயற்படுத்த வேண்டும்.

இதன்போது உங்கள் Profile இற்கு ஏற்றால் போல் ஒரு QR Code உருவாக்கப்படும்.

இதன் பின்னர் உங்களை பின்தொடர விரும்புபவர்கள் குறித்த QR Code இனை ஸ்கான் செய்தால் போதும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments