2,000 ரூபாய் நோட்டில் மோடி பேசுகிறார்? அட நிஜமா தாங்க

Report Print Aravinth in ஆப்ஸ்

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் வைத்துக் கொண்டு அனைத்தையும் சாதிக்கலாம் என்றால் மிகையாகாது.

இந்தியாவில் தற்போது கருப்பு பணம் ஒழிப்பது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இது குறித்து, அவர் சமீபத்தில் கருப்பு பணம் ஒழிப்பு சம்மந்தமாக உறையாற்றியுள்ளார்.

இந்நிலையில், Barra Skull Studios என்ற நிறுவனம் 'Modikeynote என்ற ஒரு புதிய அப்ளிகேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

அந்த அப்ளிகேஷனில், தற்போது வெளிவந்திருக்கும் புதிய 2,000 ரூபாயை ஸ்கேன் செய்தால் அதில் பிரதமர் மோடி, கருப்பு பணம் ஒழிப்பு சம்மந்தமாக உறையாற்றும் வீடியோ தெரிகிறது.

இந்த அப்ளிகேஷனானது, தற்போது ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments