அன்ரோயிட் சாதனங்களுக்கான Netflix அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் Netflix ஆனது மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனங்களுள் ஒன்றாகும்.

இந்நிறுவனம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றது.

தனது நிகழ்ச்சிகளை மொபைல் சாதனங்கள் மற்றும் ஏனைய கணனிகள் ஊடாக ஒன்லைனில் பார்த்து மகிழும் வசதியையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதேவேளை அன்ரோயிட் சாதனங்களில் தனது நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ அறிமுகம் செய்த அப்பிளிக்கேஷனில் புதிய வசதியினை உள்ளடக்கியுள்ளது.

இதன்படி இனிவரும் காலங்களில் அன்ரோயிட் பயனர்கள் HDR (High Dynamic Range) வீடியோக்களையும் பார்த்து மகிழ முடியும்.

இதற்கு முன்னர் மொபைல் சாதனங்களில் LG G6 வகை ஸ்மார்ட் கைப்பேசியில் மட்டுமே HDR வீடியோக்களை பார்வையிடக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments