வாட்ஸ் ஆப்பின் மற்றுமொரு அதிரடி வசதி: இனி இலவசமாக பணம் அனுப்பலாம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

வாட்ஸ் ஆப் நிறுவனம் சுமார் 200 மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டு தொடர்ந்தும் வெற்றிநடை போட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் அடுத்தடுத்து புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இவற்றின் தொடர்ச்சியாக பணத்தினை அனுப்புதல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற வசதியையும் அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பில் தற்போது ஆய்வு மற்றும் வடிவமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் பரீட்சார்த்த ரீதியாக பீட்டா வடிவில் இப் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்படும். அதன் பின்னர் முழுமையான பதிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்