நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க தயக்கமா? வருகிறது புதிய ஆப்

Report Print Peterson Peterson in ஆப்ஸ்
60Shares
60Shares
lankasrimarket.com

நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறரிடம் மன்னிப்பு கேட்பதை எளிதாக்கும் வகையில் ஒரு புதிய ஆப் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் இணையதள தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியை தொடர்ந்து மனிதர்களின் அன்றாட பணிகளை எளிமையாக்க விதவிதமான ஆப்கள்(Apps) அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இந்த வரிசையில் ஒருவர் மற்றொருவரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்காமல் மறைமுகமாக இணையதளம் மூலமாக மன்னிப்பு கேட்க விசேடமாக ஒரு ஆப் வெளியாக உள்ளது.

இந்த ஆப்பின் பெயர் 'Sorry'. அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் செய்தியாளரான Greta Van Susteren என்பவர் இந்த ஆப்பை வெளியிட உள்ளதாக அவரது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த ஆப்பின் உதவியுடன் ஒருவர் தனது நண்பருக்கு, குடும்ப உறுப்பினருக்கு அல்லது நடிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிறர்களுக்கு மன்னிப்பை தெரிவிக்கலாம்.

இந்த ஆப்பில் ‘Accept' மற்றும் 'Reject' என்ற இரண்டு வசதிகள் உள்ளன. இதன் மூலம் ஒருவர் கோரும் மன்னிப்பை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்யலாம்.

நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்கப்படும் மன்னிப்பு ரகசியமாக நீங்கள் மட்டுமே பார்க்கும் வகையில் மாற்றிக்கொள்ளலாம்.

ஆனால், பிறர் நபர்களிடம் கேட்கப்படும் மன்னிப்பை அனைவரும் பார்க்கும் வகையில் மாற்றிக்கொள்ளலாம்.

எதிர்வரும் 14-ம் திகதி வெளியாக உள்ள இந்த ஆப்பிற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் சமூக வலைத்தளங்களில் கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்